ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

03.08.2023 , சென்னை ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம்தான் ஜடேரி இக் கிராமத்தில் குலத் தொழிலாகவே பல ஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான வெள்ளை பாறை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாட்டு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம்,…

Read More

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!.

03.08.2023, சென்னை கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள திருச்சலூர் அம்மாகாடு பகுதியில் புதர்மண்டிகிடந்த இடத்தை விளைநிலமாக்கி கடந்த 40ஆண்டுகாலமாக தங்கள் அனுபவத்தில் பயிர்தொழில் செய்து வருகின்றனர் அந்த ஊரைச் சேர்ந்த பதினேழு குடும்பத்தினர் இந்நிலையில் 40 ஆண்டாக பயிர்த்தொழில் செய்துவரும் நிலத்துக்குள் நுழைய தடைவிதித்தது வனத்துறை! அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி உழவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி…

Read More

நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த மேனாள் மத்திய அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு கைது.

28.07.2023, நெய்வேலி, பாமக தலைவர் அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், மாநில அரசின்துணையோடு விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகிறது. இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி. தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி இராமதாசு தலைமையில் இன்று நெய்வேலியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர். இப்போராடத்தைத் தொடர்ந்து…

Read More

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.

35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது. 26.07.2023 கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள்…

Read More

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்.

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக…

Read More

மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..!

02.08.2023 , சென்னை மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..! உலகெங்கும் தமிழர்களின் பரவி வாழ்ந்தாலும் அவர்களின் ஆபத்தான நேரங்களில் நெருக்கடியான காலகட்டங்களில் தொப்புள் கொடி உறவான தாய் தமிழகம் அவர்களுக்கு உதவிடும் வகையில், முதன்மை பங்கைப் பெரிதாக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அயலகத் தமிழர்களிடையே பல காலமாக உண்டு. இதையே உள்நாட்டில் கேரளா கர்நாடகா, மராட்டியம், மற்றும் அந்தமான் தீவுகளில் , தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுவதை நாம்…

Read More

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை”

“விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுப்பு: மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்” “பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை” 26.07.2023 கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் பயிர் செய்யப்பட்ட வயல்களில் இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனமும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள்நலன் காக்க வேண்டிய தமிழக அரசு, என்.எல்.சி நிறுவனத்தின் அடியாளைப் போன்று செயல்பட்டு நிலங்களை பறிப்பது கண்டிக்கத்தக்கது….

Read More

மனிதநேயம் மரத்துப்போன மணிப்பூர்!

இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2 அல்ல 3 பெண்களை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான திடுக்கிட வைக்கும் தகவலை புகார்தாரர் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு…

Read More

தமிழ்ப்பெரியார்,மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம்..

தமிழ்ப்பெரியார், மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம். அந்நிய மொழிக்கலப்பால் தமிழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலை இன்றல்ல 100 ஆண்டுகளாகவே இருந்து கொண்டிருக்கிறது. தனித் தமிழில் எழுதவும் பேசவும் முனைந்தாலன்றி தாய் மொழியைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தார் மறைமலை அடிகள். அவரைப் போன்றவர்களின் முயற்சி யால்தான் தமிழ் இன்னும் ஒளி வீசிக் கொண்டும், மணம் பரப்பிக் கொண்டும் இருக்கிறது. மறைமலை அடிகள் 1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள்…

Read More

தமிழ் சினிமா உலகம்எந்த அளவிற்கு நன்றி கெட்டது என்பதற்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணுமறைவு ஓர் உதாரணம்.

தமிழ் சினிமா உலகம்எந்த அளவிற்கு நன்றி கெட்டது என்பதற்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணுமறைவு ஓர் உதாரணம். என்னஆனார்கள்இவர்கள்? தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள்பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்..ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்…காமெடி படங்களைத் தந்துசிரிக்க வைத்திருக்கிறார்கள்,காதல் சித்திரங்களைப் படைத்திருக்கிறார்கள்… ஆனால் அப்படிப் படம் எடுத்த பெரும்பாலோரின் சொந்த வாழ்க்கைகள் என்னவோ கண்ணீர் காவியங்களாகத்தான் முடிந்திருக்கின்றன. 1916 -ஆம் ஆண்டு “கீசகவதம்’ என்ற படத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்ற தமிழர். அவருடைய ஸ்டூடியோ எரிந்து போனதால் மகத்தான நஷ்டத்துக்கு ஆளானவர். முதல்…

Read More