Headlines

வரலாற்றை உடைத்த,வரலாற்றுத் தலைவன் …!

03.08.2023 , சென்னை

“வரலாற்றை உடைத்த, வரலாற்றுத் தலைவன்” …!ஆம் … என்எல்-சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், NLC நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், NLC நிறுவனத்தின் பல சூழ்ச்சிகளை முறியடித்து, “ஆண்ட கட்சிகளுக்கு” நீதியை போதித்த வரலாற்றுத் தலைவன் #வேல்முருகன்
ஊதிய உயர்வு, பணிநிரந்திரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க பல விதங்களில் NLC -நிர்வாகம் முயற்சித்து வந்தது. அதன் நிறைவாக, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் கூடி நாளொன்றுக்கு 40- ரூபாய் மட்டுமே ஊதியத்தை உயர்த்தி போராட்டத்தை தொழிலாளர்களிடத்தில் கலந்தோசிக்காமல்….! போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறித்தது தொமுச …
இது தொழிலாளர்களிடையே ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பெரும்பாலான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தோழர் திரு. அன்பழகன் தலைமையில் ஒன்று கூடி, #தலைவர்வேல்முருகன் அவர்களை அணுகி, தாங்கள் NLC- நிர்வாகத்தின் நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டதை ஆதங்கத்துடன் எடுத்து கூறினர். இதனை உள்வாங்கிய #தலைவர்வேல்முருகன் அவர்கள் NLC- நிறுவனத்தை எதிர்த்து ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று பிரகடனப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் வடிவம் மாறியது. களத்தின் சூழலை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலையில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை இரத்து செய்து, நாளொன்றுக்கு 60 ரூபாயும் , தொழிலாளர் சீனியாரிட்டி பட்டியலை வெளியிடுவது உள்ளிட்ட அத்துனை கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றுகிறோம் என்று உடன்படிக்கை செய்துகொண்டது NLC நிர்வாகம். அதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் 56 – நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
மீண்டும் 2022- ஆண்டு ஊதிய உயர்வு, பணிநிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துத் #தலைவர்வேல்முருகன் அவர்கள் ஆலோசனைப்படி தோழர் திரு.அன்பழகன் தலைமையில் – தொழிலாளர் வாழ்வுரிமைச்சங்கம் பல்வேறுகட்ட பேச்சுச்வார்த்தைக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து, அதில் வென்றும் காட்டியது. ஆம்….. நாளொன்றுக்கு 15.60 ரூபாய் கூடுதலாக போராடிப் பெற்றது .. இதைப் போன்றே NLC- நிறுவனத்திற்கு வீடு, நிலத்தைக் கொடுத்து – வேலைவாய்ப்புகள் எதுவும் வழங்காமல், அப்பரண்டீஸ் பயிற்சி மட்டுமே அளித்து ஏமாற்றி வந்த நிலையில்…..மீண்டும் குறைந்த விலைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 60000- தருவதாக அறிவித்து, வீடு நிலம்- கையகப்படுத்த கருத்துகேட்பு கூட்டத்தை அறிவித்தது என்எல்சி- நிர்வாகம். இதில் கடுமையான எதிர்ப்புகளை மக்கள் பதிவு செய்தனர். மக்களின் எதிர்ப்புகளை மீறி, நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து #தலைவர்வேல்முருகன் அவர்கள் தலைமையில் ஏக்கர் ஒன்றுக்கு 15 -லட்சம் வீட்டிற்கு ஒருவருக்கு கல்வித் தகுதி- அடிப்படையில் வேலை, ஐந்து சென்ட் குறையாமல் வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகளோடு NLC- தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தை மாவட்டம் முழுவதுமாக பரவச்செய்தார் தலைவர். அதனைத் தொடர்ந்து, மீண்டுமொரு துரோகத்தை அறங்கேற்றி, ஏக்கர் ஒன்றுக்கு 7- லட்சமாக உயர்த்தி வழங்கியது NLC- நிர்வாகமும், அன்றைய ஆட்சியாளர்களும். ஆனால், “நிரந்தர வேலை” என்கிற கோரிக்கை/ இன்றுவரை – காணல் நீராகவே – உள்ளது .
தொடர்ந்து மண்ணின் மக்கள் ஏமாற்றப்பட்டு “வடவர்கள் ராஜபோக வாழ்க்கையை ” வாழ்ந்து வருகிற இந்நிலையை மாற்ற, மண்ணின் மைந்தன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அணிவகுத்து, வருங்கால சந்ததிக்கு- இயற்கை வளம் நிறைந்த நம் பூமியை- பரிசளிக்க அணிவகுப்போம் வாரீர் …

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *