Headlines

தமிழ்ப்பெரியார்,மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம்..

தமிழ்ப்பெரியார்,

மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

அந்நிய மொழிக்கலப்பால் தமிழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலை இன்றல்ல 100 ஆண்டுகளாகவே இருந்து கொண்டிருக்கிறது. தனித் தமிழில் எழுதவும் பேசவும் முனைந்தாலன்றி தாய் மொழியைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தார் மறைமலை அடிகள். அவரைப் போன்றவர்களின் முயற்சி யால்தான் தமிழ் இன்னும் ஒளி வீசிக் கொண்டும், மணம் பரப்பிக் கொண்டும் இருக்கிறது.

மறைமலை அடிகள் 1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப் பட்டினத்தில் பிறந்தார் வேதாசலம். அதுதான் அவருக்குப் பெற்றோரிட்ட பெயர். தந்தை சொக்கநாதப் பிள்ளை, தாய் சின்னம்மை ஆவர்.

மறைமலை அடிகள்
தமிழ் மீது கொண்ட காதலால் அண்ணல் ‘மறை மலை’ என்று பெயரை மாற்றிக் கொண்டார். வேதம் என்றால் தூய தமிழில் ‘மறை’ என்றும், அசலம் என் றால் ‘மலை’ என்றும் பொருள். எனவே, வேதாசலம் மறைமலை என்பதாயிற்று

மறைமலை அடிகள் நல்ல உயரமும், உடற்கட்டும் உடையவர். அவருடைய குரல் மணியோசைபோல் கணீரென்று ஒலிக்கும். ஒன்பதாம் வகுப்பு வரைதான் பள்ளிக்குச் சென்று படித்தார்.

அவர் தொல்காப்பியம் போன்ற இலக்கண நால்களையும், சிலப்பதிகாரம் சிவக சிந்தாமணி போன்ற காப்பியங்களையும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார்.

சிறுவயது முதலே தம்மோடு சேர்ந்து பழகி வந்த சவுந்திரம் என்றும் மங்கை நல்லாளை மணமுடித்தார். அவர் கணவரையே தெய்வமாய் கருத்தில் கொண்டவர். அவர்களுக்கு எழு குழந்தைகள் பிறந்தனர்.

எத்தனை குழந்தைகள் பிறந்தால் என்ன? அத்தனைக்கும் அள்ளிக் கொடுக்க அன்பு மற்றாய் பீறிடுகிறதோ தம் மனைவி மீதும் மாறாத காதலுடையவர் அண்ணல் அவரை சாந்தா என்றே கனிவுடன் அழைப்பார். அமைதியே வடிவெடுத்து வந்த அப்பெண்மணிக்குப் பொருத்தமான பெயர்தான் அது.

மறைமலை அடிகளாரின் நூல்கள்
மறைமலை அடிகள் அப்போதெல்லாம் ‘நாகைநீல லோசனி’ என்ற செய்தித்தாளுக்குத் தகவல் சேகரித்துக் கொடுத்து வந்தார். சைவசித்தாந்தத்தில் கரை கண்ட சோமசுந்தர நாயக்கர் என்பாரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்தச் செய்தித்தாளில் கட்டுரைகள் எழுதினார் அவர்.

அதனைக் கண்ணுற்ற நாயக்கருக்கு அவருடைய எழுத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை ‘சித்தாந்த தீபிகை’ என்ற மாதப் பத்திரிக்கையின் ஆசிரியப் பணியில் அமர்த்தினார் நாயக்கர். அப்பணியில் இருந்த படியே தமிழாசிரியப் பணித் தேர்வுக்குத் தம்மைத் தயார் செய்து கொண்டார் அடிகள்.

நேரடித் தேர்வு நடந்தது. பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்) தான் மறைமலையடிகளிடம் கேள்விகள் கேட்டு அவருடைய புலமையைச் சோதித்தறிந்தார்

அவருடைய பரிந்துரையின் பேரில் அடிகளுக்குக் கல்லூரியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது. ஊதியம் இருபத்தைந்து ரூபாய். அப்போதெல்லாம் அது ஒரு கணிசமான தொகை.

சேகுவேரா வாழ்க்கை வரலாறு

தாய்மொழி
‘வயிற்றுப் பாட்டுக்கு வகை செய்து கொண்டால் போதுமா? வாழ்க்கையைத் தமிழுக்காக வாழ வேண் பாமா?’ என்றொரு கேள்வி எழுந்தது அவருக்குள். அன்றே வேலையை உதறினார்.

‘என் தாய்மொழியை வளப்படுத்த என்னாலானதைச் செய்வேன்’ என்று உறுதி பூண்டார். இனி நாம் தனித்தமிழில் பேசியும் எழுதியும் நமது மக்களுக்கு முன்மாதிரியாய்ச் செயல் பட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை இவற்றுக்கு எளிய தமிழில் உரையெழுதி வெளியிட்டார். கடுந்தமிழ் வேறு, கலப்புத் தமிழ் வேறு. இரண்டும் அல்ல மறை மலையடிகள் கைக் கொண்டது. அது யாவரும் புரிந்து கொள்ளத்தக்க தூய தமிழாய் இருந்தது.

தமிழே தமது மூச்சும் பேச்சும் எனக் கொண்டிருந் தாலும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் அவர் உணர்ந்தேயிருந்தார். ‘ஆங்கிலத்தில் நல்ல நூல்கள் உள்ளன.

அவற்றைப் படித்தறியவும், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யவும் ஆங்கில அறிவை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பார்.

அச்சுத் தொழிலைப் பழகியிருந்தார் அடிகள். ஆட்கள் இல்லாத போது தாமே அச்சுக் கோப்பார், இயந்திரத்தை இயக்கி அச்சிடுவார். படிகளைப் பார்த்துப் பிழை திருத்துவார். தம்முடைய பணிகள் குறித்து மனைவி யிடம் பேசி அவரது கருத்துக்களையும் கேட்டறிவார்

வடமொழியில் காளிதாசன் படைத்த மகத்தான காதல் காவியம் ‘சாகுந்தலம்’. அதனை விருப்புடன் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார் அடிகள், எங்கே நல்லது இருந்தாலும் அதைப் போற்றும் இயல்பு அவருடையது.

அதேபோன்று பொருந்தாதவைகளை ஏற்றுக் கொள்ள ஒருபோதும் அவர் இசைந்ததில்லை. இந்தி மொழி தமிழின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடக் கூடாது என்பதில் கருத்தாயிருந்தார் அவர்.

முற்போக்கு எண்ணங்களுடையவர் மறைமலை யடிகள். அதேபோன்று தெய்வ பக்தியும் உடையவரா யிருந்தார் அவர். 75 வயது வரை வாழ்ந்தார், 56 நூல்களை எழுதினார்.

தமது துணைவியார் மறைந்ததும் அவருடைய பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தாமும் சில மாதங்களிலேயே (15.9.1950) சாவைத் தழுவிக் கொண்டார். அவருடைய ‘தனித்தமிழ் கொள் கையை தமிழர்கள் பின்பற்றுவோமெனில் அது அவருக்கு நாம் செலுத்தும் நன்றியாய் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *