சேலம் ஜூலை -18
காபி போர்டு மூலம் விவசாயிகளிடம் காபி கொட்டைகளை கொள்முதல் செய்திட. நடவடிக்கை எடுக்க வேண்டும். காபி விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு.
தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் பொருளாளர் டி.தர்மலிங்கம் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கடந்த 1994 வரை காபி போர்டு நிர்வாகம் விவசாயிகளிடம் காபியை நேரடியாக கொள்முதல் செய்து வந்தனர். தற்போது அந்த நடைமுறைப்படுத்துவதில்லை. இதனால் காபி பயிரிடும் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது என வருத்தம் தெரிவித்தனர்,
மேலும் காபி போர்டு மூலம் விவசாயிகளிடம் காப்பியை கொள்முதல் செய்திட ஒன்றிய அரசு இந்திய காப்பி சட்டம் 1942 ல் திருத்தம் செய்திட வேண்டும், காபி கம்பெனிகள் நுகர்வோருக்கு விற்பனை செய்திடும் காபித்தூள் இன்ஸ்டன்ட் காப்பி விலையில் 25% காபிவிவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் விலை வழங்கிட வேண்டும்.
நிலப்பட்டா இல்லாத விவசாயிகளுக்கும் மானியங்களை காபி போர்டு வழங்கிட வேண்டும், மாநில அரசு ஒரு கிலோ காபிக்கு கேரளா அரசு வழங்குவதைப் போல பத்து ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.
வனவிலங்குகளால் சேதாரம் அடையும் காபி தோட்டங்களுக்கு வனத்துறை மூலம் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.வன உரிமைச் சட்டம் 2006 ன் படி பட்டா இல்லாத விவசாய நிலங்களுக்கு மலைகளில் நில பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.