Headlines

admin

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை! மதுரை உயர்நீதிமன்றம்.

03.08.2023, சென்னை பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை! மதுரை உயர்நீதிமன்றம். பழநி முருகன் கோயிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப் பலகை திடீரென அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தினரின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்க வேண்டும். மீண்டும் அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரவிடக் கோரி உயர்…

Read More

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!.

03.08.2023, சென்னை கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள திருச்சலூர் அம்மாகாடு பகுதியில் புதர்மண்டிகிடந்த இடத்தை விளைநிலமாக்கி கடந்த 40ஆண்டுகாலமாக தங்கள் அனுபவத்தில் பயிர்தொழில் செய்து வருகின்றனர் அந்த ஊரைச் சேர்ந்த பதினேழு குடும்பத்தினர் இந்நிலையில் 40 ஆண்டாக பயிர்த்தொழில் செய்துவரும் நிலத்துக்குள் நுழைய தடைவிதித்தது வனத்துறை! அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி உழவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி…

Read More

வரலாற்றை உடைத்த,வரலாற்றுத் தலைவன் …!

03.08.2023 , சென்னை “வரலாற்றை உடைத்த, வரலாற்றுத் தலைவன்” …!ஆம் … என்எல்-சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், NLC நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், NLC நிறுவனத்தின் பல சூழ்ச்சிகளை முறியடித்து, “ஆண்ட கட்சிகளுக்கு” நீதியை போதித்த வரலாற்றுத் தலைவன் #வேல்முருகன்ஊதிய உயர்வு, பணிநிரந்திரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க பல விதங்களில் NLC -நிர்வாகம் முயற்சித்து வந்தது. அதன்…

Read More

ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

03.08.2023 , சென்னை ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம்தான் ஜடேரி இக் கிராமத்தில் குலத் தொழிலாகவே பல ஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான வெள்ளை பாறை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாட்டு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம்,…

Read More

ஆடிப்பெருக்கு.. ஆடி 18 விரத நாளில் சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்

03.08.2023 சென்னை, ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விரதத்திற்காக சமையல் செய்யும் பெண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். காவிரியின் பெருமை: ஆடி 18ஆம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன்…

Read More

ஆடி பெருக்கு 2023 : மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம் இதுவே..!

03.08.2023 , ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும்.  ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள். மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம்  ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்…

Read More

ஆகஸ்ட் 01 அன்று கடலூர் மாவட்டம் வளையமாதேவி செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்.

02.08.2023 , சென்னை ஆகஸ்ட் 01 அன்று கடலூர் மாவட்டம் வளையமாதேவி செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம். இதனைத் தொடர்ந்து அக்கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.மேலும், வரும் 8-ம் தேதி இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2 சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல்வளையமாதேவி,கீழ்விளைமாதேவி அம்மன் குப்பம், கரிவட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், ஆதனூர், உள்ளிட்டகிராமங்களில் நிலங்களை கையகப்படுத்திய என்எல்சி இந்தியா நிறுவனம், கடந்த 6…

Read More

மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..!

02.08.2023 , சென்னை மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..! உலகெங்கும் தமிழர்களின் பரவி வாழ்ந்தாலும் அவர்களின் ஆபத்தான நேரங்களில் நெருக்கடியான காலகட்டங்களில் தொப்புள் கொடி உறவான தாய் தமிழகம் அவர்களுக்கு உதவிடும் வகையில், முதன்மை பங்கைப் பெரிதாக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அயலகத் தமிழர்களிடையே பல காலமாக உண்டு. இதையே உள்நாட்டில் கேரளா கர்நாடகா, மராட்டியம், மற்றும் அந்தமான் தீவுகளில் , தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுவதை நாம்…

Read More

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது!

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது! என்எல்சியின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பச்சைகொடி காட்டியுள்ளதாம்!. கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் , 2036 – ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி , மூன்றாவது சுரங்கம்…

Read More

நெய்வேலி வடக்கன்களின் அட்டூழியம் 15 வட இந்திய அதிகாரிகள் ஆடம்பரமாக கோல்ப் விளையாட விவசாயிகளிடம் பிடிங்கிய 1000 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம்.

1.08.2023, சென்னை நெய்வேலி வடக்கன்களின் அட்டூழியம் 15 வட இந்திய அதிகாரிகள் ஆடம்பரமாக கோல்ப் விளையாட விவசாயிகளிடம் பிடிங்கிய 1000 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம். தமிழனின் நெல்விளையும் விவசாய நிலத்தில் புல்டோசரை இறக்கி நாசம் செய்யும் நாசக்காரர்களே! சோத்தைதான் திங்கறீங்களா?…. எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More