21.07.2023 இன்று அவரின் 21வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் போற்றிய கலைஞனை இன்று நினைத்து பார்க்க
கூட இல்லாத அளவு திராவிடம் மழுங்கடித்து விட்டது.
கடந்த வருடம் நினைவு
அரசு செய்தி குறிப்பு கூட இல்லை.அந்த தமிழ் மகா கலைஞனுக்கு…!
திருப்பதி சென்று வந்தார் என்று காரணம் காட்டி
கருணாநிதி கைங்காரியத்தில்
சென்னை முழுதும் திருப்பதி கணேசா
கேவிந்தா என்று சுவரொட்டி ஒட்டப்பட்டது.
திமுகவில் பகுத்தறிவு பேசி சிவாஜியை
வெளியேற்றினார்கள்
திமுகவிற்கு எம் ஜீ ஆரை விட அதிகம்
நன் கொடை வசூலித்து கொடுத்தவர்.
கருணாநிதி க்கு தமிழர் புகழ்பெற்ற
நடிகர் கட்சியில் இருக்க கூடாது,
என்பதற்காக திட்டமிட்டு வெளியேற்ற பட்டார்..
( ஆனால் இன்று கருணாநிதி வீட்டிலேயே சமஸ்கிருத பரிகாரங்களும்
கோயில் கோயிலாக தவம் கிடப்பதும்
ஆஸ்தான ஜோதிடரை வைத்து கொண்டு
ஒவ்வொரு நாளை கடத்துவதும்.)
குழந்தை மனம் கொண்ட சிவாஜி
நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார்.
வருடத்திற்கு அதிகபட்சமாக 15 படங்களுக்கு மேல் வெளியான
காலங்களும் உண்டு…!
இன்று வரை நடிப்பிற்கு இவர் தான்
மைல் கல்!
ஆனால்
இந்திய ஒன்றிய அரசின்
தேசிய விருது இதுவரை
கொடுக்கப்பட வில்லை,
என்பது காலக்கொடுமை.
இது தமிழர் மீதான வன்மத்தை
மட்டுமே காட்டுகிறது …!
வசன உச்சரிப்பு.
நடை 🚶
மட்டும் அல்லாமல்
குளோசப் சாட் வைக்கத் தகுதியான
ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே..!
இவரின் உத்தம புத்திரன் நடை ஸ்டைலை தான் இரஜினிகாந்த்
காப்பி அடித்ததை அவரே ஒப்பு கொண்டார் .!
கடந்த 50 வருடங்களில் தமிழர் என்கிற
ஒரே காரணத்தால் திராவிட அரசியல்
வாதிகளால் பதம் பார்க்கப்பட்ட ஒரே
நடிப்புலக மேதை சிவாஜி மட்டுமே.
வார்த்தைக்கு வார்த்தை சிவாஜி
புகழை பயன்படுத்தி கொண்ட
கமல் ஹாசன் மற்றும் இரஜினிகாந்த்
கடந்த வருடம் நினைவு டிவிட்
கூட போட நேரம் இல்லை
போலும்.
அவ்வளவு ஏன் திராவிட சொம்பு
வயிறு முத்துக்கும் கூட கடந்த வருடம் நேரம் இல்லை.
இன்று நம்மை விட்டு அந்த மேதை விண்ணுலகம் சென்ற நாள்…!
தமிழர்கள் போற்றி நினைவில் வைத்து கொள்ள வேண்டிய பொக்கிசங்களில்
ஒருவர் சிவாஜி கணேசன்.