இலங்கையை கண்டிக்காத மத்திய மாநில அரசுகள்!
பொருளாதாரத்தில் நசிந்த இலங்கைக்கு
மத்திய அரசும்,மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டுஅள்ளி,அள்ளி கொடுத்தனர் .
நம்மிடம் பிச்சை எடுத்த வடுக சிங்களவன் மீண்டும் தன் சுயரூபத்தை காட்டியள்ளான்!
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகமீனவர்களை கைதுசெய்துள்ளது வடுக சிங்கள இராணுவம்!
இந்தியாவின் அங்கமான? தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை ஏன் மத்திய அரசு கண்டிக்கவில்லை?
எதற்கெடுத்தாலும் அறிக்கைவிடும் நொண்ணாமலை இது குறித்து பேசாதது ஏன்?மீனவர்கள் விடயத்தில் திமுக அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்காமல் மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடித்திட தமிழக காவல் துறையினரை தமிழக கடற்பரப்பில் பாதுகாப்புக்காக நிறுத்தவேண்டும் !நிறுத்துமா இந்த திராவிட மாடல் அரசு ?.
மக்கள் தொலைக்காட்சி
தமிழினத்திற்கென்று இருந்தது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே !
மக்கள் தொலைக்காட்சி பற்றி சொல்லனும்னா நிறைய இருக்கு அதிலிருந்து சில அற்புதமான நிகழ்ச்சிகள் தூய தமிழ் பரப்பல் உழவர் நிகழ்வுகள் இன உணர்வுச் செய்திகள் என மண் பயனுற வேண்டும் என்கிற இலக்கில் செயல்பட்ட ஊடகம். ஒரு பெரிய கட்சியின் இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சியினரோடு தொடர்புள்ள ஊடகம். பல ஆயிரம் கோடிகளைக் கொண்டுள்ள மருத்துவர் இராமதாசு ஐயா குடும்பத்தால் நடத்த முடியவில்லை எனச் சொல்லி மூடுவது கேவலமானது.
ஒரு தொலைக்காட்சி உரிமம் வாங்குவது எவ்வளவு கடினமான ஒன்று. அதைப்போய் கைவிடலாமா. ஊடக பலத்தை இழக்கிறவன் இந்த உலகில் ஓரங்கட்டப்படுவான்.
அன்புமணியால் முடியாவிட்டால் அதை வேறு பொருத்தமான ஆட்களிடம் ஒப்படைப்பதே சரி.
ஒரு ஊடகத்தையே வெற்றிகரமாக நடத்த முடியவில்லை என்பவர் நாளை முதலமைச்சர் ஆனாலும் சமரசமாகியே போவார்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்…பேராசான்.
சமூக முன்னேற்ற சங்க நாளிதழ்
அனைவரின் பங்களிப்பால் உருவானது!
தினப்புரட்சி
நாளிதழ் மறைந்த பெரியவர்
தொழிலதிபர் டெல்டா நாராயணசாமி அவர்களின் பெரும் பொருள் உதவியால்
அனைத்து பாட்டாளிகளின்
உழைப்பால்
உருவானது
அதன் ஆசிரியர் பேராசிரியர் தீரன் அவர்கள் இருந்தார்!
அப்போது
(பாமக தலைவர் -பேராசிரியர் தீரன்
பாமக பொதுச்செயலாளர்-தலித் எழில்மலை
பாமக பொருளாளர்-குணங்குடி ஆர் எம் ஹனீபா
பாமக இளைஞரணி செயலாளர் -வீரத்தளபதி சி,பசுபதிபாண்டியன்
பாமக இளைஞரணி தலைவர்-
கே எம் ஷெரீப்
இருந்தார்கள்)
பிறகு……?
தமிழோசை மற்றும் மக்கள் தொலைக்காட்சி 2006 ல் அனைத்து மாவட்ட பாட்டாளிகளின் நிதியுதவியால் உருவானது!
2004ல் கோனேரிகுப்பம்
வன்னியர் அறக்கட்டளை
பலரின் உழைப்பால் உருவானது!
பிறகு ,,,,,,,?
தற்போது ராமதாசு அறக்கட்டளை!(தன்னாட்சி சொத்து)
தற்போது
மக்கள் தொலைக்காட்சி
மூடு விழா!
மக்களின் தொலைக்காட்சி
நிர்வாக இயக்குநர்
கோ க மணி அவர்களின்
மகன் தமிழ்க்குமரன்!
பாமக மாநில தலைவர்
கோ க மணியிடம் இருந்து
பதவி பறிக்கப்பட்ட பின்பு
தற்போது அந்த
தொலைக்காட்சி
மூடு விழா
என்கிறார்கள் !
ஆனால் ஒன்று மட்டும்
உண்மை
தி க அறக்கட்டளை
சொத்துக்களை
வீரமணி மகன்
அன்புராஜ் மட்டுமே
நிர்வாகம் செய்யலாம்!
திமுக அறக்கட்டளை
சொத்துக்களை
கலைஞர்
குடும்பம்
மட்டுமே
நிர்வகிக்கலாம்!
அதே வரிசையில்
வன்னியர் அறக்கட்டளை
சொத்துக்களை
ராமதாசும்
அவரது
மகன் அன்புமணி
மட்டுமே
நிர்வகிக்கலாம்!
என்பதுதான்
நிதர்சனமான
உண்மை!
தருமபுரி புத்தகத் திருவிழா 2022
வாசிப்பாளரின் ஆதங்கம் !
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் அவர்களின் “தகடூர் புத்தக பேரவை” அமைப்பு நடத்தும் நான்காவது வருட புத்தக திருவிழா.
புத்தகத் திருவிழாவுல புத்தகம் வாங்க போறது நல்ல அனுபவம்னு எல்லாரும் போகலாம்தான்.
ஆனா ஒன்னு அங்க மேடை போட்டு
திடல் திண்ணி தி.க கும்பல்களும் போலி கம்னீஸ்ட் தோழர்களும் மேடைக்கு கீழ ஒருத்தன் இலைன்னா கூட புத்தகம் வாங்க வர்றவன் காது கிழியற அளவுக்கு கத்தி கத்தி காதுலயே வெச்சு செஞ்சிட்ருப்பானுங்க. இதுதான் ஒரே சங்கடம்
வழக்கமா பொது வாழ்க்கைல இவனுங்க பண்ற அட்டூழியத்த பாத்து இதுங்க மூஞ்சில முழிச்சா குடிக்க கூழு கெடைக்காதுன்னு ஒதுங்கிப் போற சமூகத்த இப்படி புத்தகம் வாங்க வந்த எடத்துல வெச்சு காதுலயே செஞ்சி விடுறது தப்புங்க தோழர்ஸ்..
போன வருஷம் நடுநாட்டு எழுத்தாளர் கண்மணி குணசேகரனை அழைக்க அனுமதி மறுத்துட்டாங்க. இந்த தடவையும் யாரோ போராடி அழுத்தம் கொடுத்து அவரை வரவெச்சிருக்காங்க. கண்மணி அண்ணன் வந்து புத்தக திருவிழாவில் கலந்துகிட்டார். தமிழினி அரங்கில் கண்மணி குணசேகரனின் அனைத்து நாவல்களும் சிறுகதைகளும் விற்று தீர்ந்தது. இதுதான
கண்மணிக்கு கிடைத்த கௌரவம்.
கண்மணி குணசேகரனை மறுக்கும் அதே செந்தில் டாக்டர் விழுப்புரம் நவீனா சிறுமி கொலைக்கு உடந்தையான ஊடகவியலாளரான குணசேகரனை எப்போதும் அழைத்து கொண்டாடி உபசரிப்பார்.
என்னதான் செந்தில் டாக்டர் தன்மேல சாதி முத்திரை விழக்கூடாதுன்னு இதுபோல தி.க கும்பல், கம்னீஸ்ட் கும்பல் கூட சேர்ந்துனு இப்படில்லாம் கோமாளித்தனம் பண்ணாலும்
அவருகிக ஓட்டு போட்டு எம்பி ஆக்கி கௌரவப்படுத்தினது பாட்டாளிமக்கள் கட்சி வன்னியர்கள்தான். அவர் இருந்த கம்னீஸ்ட் கட்சி சார்பா அவங்க ஊர்ல அவரால பஞ்சாயத்து தலைவரா கூட ஆகிருக்க முடியாது
வன்னிய படைப்பாளிகளுக்கு உங்க மேடைல இடம் இல்லைன்னு மறைமுக அஜெண்டா வெச்சிருக்கற மாதிரி உங்க புத்தக சந்தைல வன்னியர்களுக்கு இடம் இல்லைன்னு வெளிப்படையா சொல்லிட்டீங்கன்னா இன்னும் வசதியா இருக்கும் டாக்டர்.
தகடூர் படைப்பாளிகள் அமைப்பு வைத்திருந்த விற்பனை நிலையத்தில்
புலவர் கோவிந்தராசு எழுதிய நெல்லிக்கனி அதியாமான்கள் பற்றிய ஆய்வுநூல், கனல் மைந்தன் எழுதிய மஞ்சவாடி நாவல், தகடூர் ஊர் பெயர்கள்- என சில புத்தகங்கள் வாங்கினேன்.
தொல்லியல் துறை ஸ்டால்ல சில புத்தகங்கள்,
வம்சி பதிப்பகத்தில் பிரமிளின் இலக்கிய விமர்சன கட்டுரைகள் தொகுப்பும் வாங்கினேன்.
இன்னைக்கு புத்தக சந்தையோட இறுதிநாள். இனி மேடை கிடைக்காதேன்னு போலி முற்போக்கு மக்கள் விரோத சக்திகள் எல்லாம் உக்கிரமா வாய்ல வடை போண்டா சுட்டுனு இருப்பாங்க. என்கிட்ட நல்ல noise cancellation ஹெட்போன் இருக்கு. எடுத்து மாட்டினு போலாமா இல்ல காதுல பஞ்சு வெச்சினு போலாமான்னு யோசிக்கறேன்.
அரசியல் களம் எட்டாம் ஆண்டில் இணையதள துவக்க விழா
தமிழின உறவுகளுக்கு வணக்கம்
எமது அழைப்பை ஏற்று அரசியல்களம் மாதம் இருமுறை இதழின் எட்டாம் ஆண்டுவிழாவில் அரசியல்களம் .காம் இணையதளத் துவக்கவிழா மற்றும்
ஓலைச்சுவடி, சித்தமருத்துவ ஆய்வாளர் திரு.அண்ணாமலை சுகுமாறன் அவர்களுக்கு பாராட்டுவிழா
இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவைசிறப்பித்த
திரு.சீதையின் மைந்தன், நிறுவனர்.தமிழியப் பேரியக்கம்,தமிழ்க் குலங்கள் கூட்டமைப்பு.
முனைவர் தவத்திரு.ஆதிசிவ அண்ணாமலைச்சித்தர் மாநிலத்தலைவர்,சித்தர்பேரவை.
திரு.பீ.ம.பாண்டியன் தலைவர், தாய்த்தமிழர் கட்சி
திரு.அழகர் மாந்லச்செயலாளர் ,தமிழர்களம்
திரு.இராசாகிருட்டிணன் ஒருங்கிணைப்பாளர் தமிழர்தேசியக் கூட்டணி
திரு.முனியாண்டி , உயர்மட்டக்குழு தலைவர் கர்நாடக தமிழர்பாதுகாப்பு இயக்கம் பெங்களூர்.
திரு.கோபி ஏகாம்பரம் ,தலைவர் கர்நாடகதமிழர் பாதுகாப்பு இயக்கம் பெங்களூர்.
திரு.அன்றில் (எ)ஏழுமலை ,தமிழர்கழகம் ,விழுப்புரம் மாவட்டம்.
திரு.க.சீ.மூர்த்தி ஆசிரியர், வேட்டுவர்படை
இவர்களோடு எமது அரசியல்களம் குழும உறவுகள் நட்புகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி .
ஓலைச்சுவடி ,சித்தமருத்துவ ஆய்வாளர் திரு.அண்ணாமலை சுகுமாறன் அவர்களுக்கு பாராட்டுவிழா !
[11:12 am, 02/07/2022] Pargunan: 26-06-22 ஞாயிற்றுக் கிழமை புதுச்சேரியில் நடைபெற்ற அரசியல்களம் மாதம் இருமுறை இதழின் எட்டாம் ஆண்டு விழா மற்றும் அரசியல்களம்.காம் இணையதளத் துவக்கவிழாவில்
ஓலைச்சுவடி ,சித்தமருத்துவ ஆய்வாளர் திரு.அண்ணாமலை சுகுமாறன் அவர்களுக்கு பாராட்டுவிழா !
ஐயா சுகுமாறன் அவர்கள் முகநூலில் சுமார் பத்தாண்டுகால நண்பர் நிறைய செய்திகள் அவருடைய பதிவுகளில் கண்டேன் ஒரு அரசு செய்யவேண்டிய வேலையை தனிமனிதராக செய்திருக்கிறார் இவருடைய பதிவில்தான் வெடியுப்பு பற்றிய செய்தி கிடைத்தது
புதுச்சேரி போகும்போதெல்லாம் ஐயா அவர்களை சந்திக்க நினைப்பேன் வேலை நிமித்தம் அதற்கான சூழல் அமையவில்லை இந்த நிலையில் கொரோணா பரவலின் போது உடல்நிலை பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார் கொஞ்சநாட்களுக்கு பிறகு சர்கரை நோயின் தாக்கத்தால் வலதுகால் பாதி பாதம்இழந்துவிட்தாக பதிவிட்டிருந்தார் இப்போது ஐயா பார்த்துவிட்டு வருவோம் என்றிருந்த நேரத்தில்
எமது புதுச்சேரி செய்தியாளர் சங்கர் நமது இதழின் ஆண்டுவிழாவை புதுவையில் நடத்தலாமா என்றார் நானும் சரிஎன்று சொல்லிவிட்டு ஐயாவிற்கு இந்தமேடையில் பாராட்டுவிழா நடத்துவதாக திட்டமிட்டேன் இதை ஐயாவிற்கு சொல்லி சம்மதம் வாங்க அவரது கைபேசி எண்ணை முகநூலில் பெற்று அவரிடம் பேசினேன் ஐயா என்னைப் பற்றி விசாரித்தார் சொன்னேன் இதெல்லாம் ஒரு பத்து நாட்களில் நடந்தது
அழைப்பிதழோடு ஐயாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம் ஐயாவால் நடக்க முடியவிஎல்லை இருந்தாலும் எங்களை வரவேற்று உபசரித்து ஔவையின் ஞானக்குறள் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார் அதை எங்களுக்கு பரிசளித்தார் ஐயாவோடு சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றோம்.
உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் நிகழ்சியன்று சரியாக 3 மணிக்கு ஐயா வந்துவிட்டார் அரங்கம் ஒரு்மணிநேரம் தாமதமாகக் கிடைத்தாலும் பாராட்டுவிழா சிறப்பான நிகழ்வாக அமைந்தது இந்த வாய்ப்பு எமக்கு வழங்கிய அண்ணாமலை சுகுமாறன் ஐயாவிற்கு நன்றி.