Headlines

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.

26.07.2023

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிறப்பாக வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு, என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே தங்கள் நிலங்களைக் கொடுத்த மக்களுக்கு இதுவரை உரிய வேலை வாய்ப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படாத நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஆம் ஆண்டிலேயே நிலம் எடுப்பது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்பு கூட்டங்களில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இச்சூழலில், சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கத்தாழை ஆகிய 3 ஊராட்சிகளிலும், நிலம் கையகப்படுத்துவதையும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதனை சிறிதும் மதிக்காமல், அப்பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பில், விளை நிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிர்வாகம் முயன்றது அதிர்ச்சி அளிக்கிறது.

வளையமாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில், நடவு செய்யப்பட்ட, நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அதை பொருட்படுத்தாமல், விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி, நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டை மறுப்பது, தமிழர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஏற்கனவே உள்ள பணியாளர்களை நிரந்தரமாக்க மறுப்பது, பணிப்பயிற்சி மாணவர்களுக்குப் பணி வழங்க மறுப்பது என தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தற்போது நிலங்களை கையகப்படுத்த முயலுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தக் கூடாது. குறிப்பாக, வாழ்வாதார இழப்பு, வேலை மறுப்பு, சூழலியல் அழிப்பு போன்ற காரணங்களுக்காக இத்திட்டத்தை அடியோடு எதிர்க்க வேண்டும்.

ஏற்கனவே, நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்போது பணியாற்றும் தமிழர்களுக்கு பணி நிரந்தரம், பணியை உறுதிப்படுத்தவும், ஒன்றிய அரசு மற்றும் என்.எல்.சி நிர்வாகத்திடம், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தற்போது, ​​விளைநிலங்களை கையகப்படுத்த முயன்று வரும் என்.எல்.சி நிர்வாகத்தையும், காவல்துறையையும், தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இனி வரும் காலங்களில், விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால், எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.

முக்கியமாக, நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்று கூறி வரும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு, மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *