டெல்லி: இந்திய தர கவுன்சில் காலியாக உள்ள காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளை பரிசோதகர் பணிக்கு 553 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய தர கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இங்கு காப்புரிமை மற்றும் வடிவமைப்புக்கான பரிசோதகர் ( Examiner of Patents & Designs) பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
காலியிடம்: இந்திய தர கவுன்சிலில் காப்புரிமை மற்றும் வடிவமைப்புக்கான பரிசோதகர் பணிக்கு மொத்தம் 553 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயோ டெக்னாலஜிக்கு 50, பயோ கெமிஸ்ட்ரி 20, புட் டெக்னாலஜிக்கு 15, கெமிஸ்ட்ரி 56, பாலிமர் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி 9, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் 53, எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் 108, எலக்ட்ரிக்கல் என்ஜினியரீங் 29, கம்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி 63, பிசிக்ஸ் 30, சிவில் என்ஜினியரிங் 9, மெக்கானிக்கல் என்ஜினியரிங் 99, Metallurgical என்ஜினியரிங் 4, டெக்ஸ்டைல் என்ஜினியரிங் பிரிவுக்கு 8 பேர் என மொத்தம் 553 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி, பட்டமேற்படிப்பு உள்ளிட்டவற்றை படித்திருக்க வேண்டும். மாஸ்டர் டிகிரியில் பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, மாலிக்குலர் பயோலாஜி, பயோ பிசிக்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினியரிங்: மேலும் இளங்கலை பட்டப்படிப்பில் புட்டெக்னாலஜி, கெமிக்கல் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் டெக்னாலஜி, பாலிமர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், சிவில், மெக்கானிக்கல், டெக்ஸ்டைல், Metallurgy உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
என்ஜினியரிங்: மேலும் இளங்கலை பட்டப்படிப்பில் புட்டெக்னாலஜி, கெமிக்கல் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் டெக்னாலஜி, பாலிமர் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேசன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், சிவில், மெக்கானிக்கல், டெக்ஸ்டைல், Metallurgy உள்ளிட்ட பிரிவுகளில் என்ஜினியரிங் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது 2023 ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படும். மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் மாதம் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 500 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.qcin.org எனும் இணையதளம் மூலம் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக உள்ளது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வாக உள்ளனர்.
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்