Headlines

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சேலம், ஆக12-  சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. இராமமூர்த்தி…

Read More

`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி

03.08.2023, சென்னை `இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி ஒரத்தநாடு அருகே நடவு செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் கல்லூரி மாணவி ஒருவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் பலரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன், இவரின் மனைவி காந்திமதி. இவர்களுக்கு…

Read More

ஆடிப்பெருக்கு.. ஆடி 18 விரத நாளில் சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்

03.08.2023 சென்னை, ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விரதத்திற்காக சமையல் செய்யும் பெண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். காவிரியின் பெருமை: ஆடி 18ஆம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன்…

Read More

ஆடி பெருக்கு 2023 : மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம் இதுவே..!

03.08.2023 , ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும்.  ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள். மாங்கல்யம் மாற்ற உகந்த நேரம்  ஆடிப்பெருக்கு தினத்தின் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தாலி பிரித்து கோர்ப்பதே ஆகும். புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி 18 என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள்…

Read More

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது!

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது! என்எல்சியின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பச்சைகொடி காட்டியுள்ளதாம்!. கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் , 2036 – ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி , மூன்றாவது சுரங்கம்…

Read More

உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian )தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

1.08.2023, சென்னை உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian )தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? ஆம் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது. பல கிமீ பரவி விரிந்து ஓடியதால் இது பரவனாறு எனவழங்கப்பட்டது வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம், தற்போதைய என்எல்சி சுரங்கம், கத்தாழை,…

Read More

நெய்வேலியை பார்த்து.. எனக்கு அழுகையே வந்தது.. சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி.. கலங்கிப்போன ராமதாஸ்!

நெய்வேலி: இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பயிர் செய்யப்பட்ட வயலில் நேற்று புல்டோசர் இறங்கி குழிகளை தோண்டிய சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இன்று நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பாமக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வழக்கு: இதனால் இரண்டாவது சுரங்கத்திற்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன.. ஆனால் இதற்கு விவசாயிகள், பொதுமக்கள்…

Read More

என்எல்சி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

28.07.2023, என்எல்சி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது விளைநிலத்தில் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது காவல்துறை துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்எல்சி நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்றவில்லை முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு…

Read More

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 28.07.2023 ,கடலூர் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம்…

Read More

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார்.

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் அடியில் தலைவைத்து படுத்து பதட்டத்தை ஏற்படுத்தி மரு.அன்புமணி இராமதாசு அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் எல் சி நிறுவனம் நேற்று (27-07-23)வளையமாதேவியில் முப்பது நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெல் வயலில் காவல்துறையின் பாதுகாப்போடு பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை இறக்கி வயலை…

Read More