சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை.
நாடுமுழுவதும் வரலாறு காணாத வகையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் அரசு மக்களுக்கு மலிவுவிலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடுசெய்து வருகிறது சென்னையில் ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்துள்ளது சென்னையைத் தொடர்ந்து இன்று சேலத்தில் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது!. சேலம் மாநகராட்சி முதற்கட்டமாக என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உடன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.
இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.