Headlines

மறைக்கப்பட்ட உண்மை

இந்திய வரலாறு உலகின்முதல்விமானம் இந்தியாவில்தான் உருவாக்கப்பட்டது.

First Flight is Indian


மும்பை, சௌபாதி கடற்கரை, 1895ஆம் ஆண்டு.
மக்கள் பலர் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, ஓர் அதிசயம் அங்கு அரங்கேறியது.

ஆம். நவீன யுகத்தின் விமானம் காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் 1500 அடி உயரத்தில் அநாயாசமாகப் பறந்தது. பின்னர் பாதுகாப்பாகத் தரையைத் தொட்டது. இந்த விமானத்தை அதன் வெள்ளோட்டத்தைக் கண்டுகளித்த பலருள் முக்கியமான இருவர் பரோடா மன்னர் #ஸ்ரீசாயாஜிராவ்கெய்க்வாடு மற்றும் நீதியரசர் #மஹாதேவகோவிந்த_ரானடே.

இந்த வானவூர்தியை வடிவமைத்து இயக்கியவர் #சிவகுமார்பாபுஜிதளபதே என்பவர்.
இவர் ஒரு வேத ஆராய்ச்சியாளர். ஒரு விஞ்ஞானி. கலைக் கல்லூரியின் ஆசிரியர். தளபதேயின் இந்த விமானத்தின் பெயர் #மாருதி_சக்தி

இச்செய்தி புனேயிலிருந்து வெளிவரும் #பாலகங்காதர_திலகர் பத்திரிகையான #கேசரி எனும் நாளிதழில் வெளிவந்தது.

பிரிட்டிஷ் அரசு பரோடா மன்னரை மிரட்டி இந்த ஆராய்ச்சியை முளையிலேயே கிள்ளியது. அதோடு, இந்த விமானத்தின் பாகங்களையும் செய்முறைகளையும் கைப்பற்றியது என டெக்கான் ஹெரால்டு பத்திரிகை, (டிசம்பர் 2003) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விமானம் எந்த தொழில்நுட்பத்துடன் இயங்கியது தெரியுமா?
அதுதான் #வைமானிகா_சாஸ்திரம் எனப்படும் பாரதத்தின் பண்டைய பறக்கும் அறிவியல் தொழில் நுட்பம்.

அதில் விமானங்கள் வடிவமைப்பு, கட்டுமானம், பறக்க வைப்பது, எரிபொருள், விமானங்களின் விசைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எல்லா விஷயங்களும் உள்ளன.
அதன் மூலம் விமானம் தயாரிக்க மிகுந்த ஆர்வம் கொண்ட தல்பாடே அதற்கு பரோடா மன்னரின் ஆதரவும் நிதி உதவியும் பெற்றார்.
பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் அவர் ஒரு விமானத்தை வடிவமைத்தார்.

ஆம். அதுதான் அன்று மும்பை கடற்கரையில் பறந்த உலகின் முதல் நவீன விமானம்.
இந்தச் செய்தி அன்று சுதந்திர போராட்ட வீரர் திலகரால் நடத்தப்பட்ட #சாம்னா என்ற செய்தித்தாளில் வெளி வந்துள்ளது.
இந்தியனின் புகழை விரும்பாத வெள்ளை கிருத்துவ அரசு இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்தது. தல்பாதேவுக்கு உதவினால் சரிவராது என்று பரோடா மன்னரை எச்சரித்தது. இதனால் தம் விமானத்தை மேல்கொண்டு அபிவிருத்தி செய்து உருவாக்குவது என்பது தல்பாடேவுக்கு கனவாகிப் போனது. அதனால் அவர் மனம் உடைந்து போய் எதிலும் நாட்டமின்றி இருந்தார். அவர் எதிலும் பற்றற்று போய் காலமானார்.

அவர் காலத்துக்குப் பின் சிதைந்த அவர் விமான பாகங்கள் அவர் வீட்டின் தோட்டத்தில் கிடந்தன என்றும் அதைப் பின் அவர் சந்ததியினர் ஏலம் விட அந்த சிதைந்த விமானத்தை பிரிட்டனின் RALLIS நிறுவனம் ஏலத்தில் எடுத்து இங்கிலாந்து கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.

இதற்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகே 1903, டிசம்பர் 7ம் நாள் ரைட் சகோதரர்களின் விமானம் ஆகாயத்தில் பறந்தது.
ஆனால் மெக்காலே கல்வி இதைத்தான் உலகின் முதல் விமானம் என சொல்லி தருகிறது.

வைமானிகா சாஸ்திரம், இது பரத்வாஜ மகரிஷியால் எழுதப்பட்டது. பரத்வாஜ மகரிஷி மஹாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் / கவுரவர்கள் குருவான துரோணாச்சாரியாரின் தந்தை ஆவார்.


வாழ்க வையகம் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன் சந்தோஷம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *