Headlines

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்பட்ட புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) நினைவுநாள்.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார்

இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.[2] அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர்த் தனியே தமிழ் கற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக 1951-ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பள்ளிப்பருவத்தில் சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்த இவர் இயற்றிய குண்டலகேசி என்னும் காவியம் 1958-ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் .

இவர் எழுதிய நூல்கள் பல நூறாக விரியினும்
திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் இவரது நூலை 1963-ஆம் ஆண்டு நேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் இவரது நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம் வெளியிட்டார்.

இளங்குமரனாரின் நூல் படைப்புகள்

இலக்கண வரலாறு
காக்கைபாடினியம்
எங்கும் பொழியும் இன்பத் தமிழ்
குண்டலகேசி காவியம் (1127 பாடல்)
தமிழிசை இயக்கம் வரலாறு
தனித்தமிழ் இயக்கம்
திருக்குறள் தமிழ் மரபுரை
தேவநேயம் 13 தொகுதிகள் ஆய்வு நூல்
நாலடியார் தெளிவுரை
பாவாணர் வரலாறு
யாப்பருங்கலம் இலக்கணம்
புறத்திரட்டு இலக்கணம்
செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் (10 தொகுதிகள்)
தென்னாட்டு வணிகம்
திருக்குறளுக்கு உரை திருக்குறளே ஆய்வு நூல்
திருக்குறள் (கருத்துரை)
உவமைவழி அறநெறி விளக்கம் (3 தொகுதிகள்)
திரு.வி.க தமிழ்க்கொடை அறிமுகம்
திரு.வி.க முன்னுரைகள்
ஈழம் தந்த இனிய தமிழ்க்கொடை

இளங்குமரனார் பெற்றுள்ள விருதுகள்:

1978-ல் நல்லாசிரியர் விருது
1991-ல் ஈரோடு வேலா.இராசமாணிக்கத்தின் குரலியம் அமைப்பு இவருக்கு செந்தமிழ் அந்தனர் பட்டம் வழங்கியுள்ளது.
1994-ல் தமிழக அரசின் திருவிக விருது
1995-ல் மதுரை ஆடி வீதி திருவள்ளுவர் கழகம் சார்பில் திருக்குறள் செம்மல் விருது
1996-ல் திருச்சி தமிழ் சங்க விருது
1995-ல் திருச்சி மாவட்ட திருக்குறள் பேரவை சார்பில் குன்றக்குடி அடிகளார் வழங்கிய குறள் ஞாயிறு விருது
1997 மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வழங்கிய பெரியார் விருது
1999-ல் சென்னை தமிழ் சான்றோர் பேரவை (நகலகம் அருணாசலம்) வழங்கிய மொழிப்போர் மறவர் விருது
2000-ல் சென்னை கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கப்பட்டது.
2003-ல் பதிப்புச் செம்மல் மெய்யப்பன் வழங்கிய தமிழ் இயக்க செம்மல் விருது
2004-ல் திருவாடுதுறை மடம் சிவப்பிரகாச அடிகளார் வழங்கிய திருக்குறள் செம்மல் விருது
2004-ல் பழ.நெடுமாறன் வழங்கிய உலகப் பெருந்தமிழர் விருது
2004-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ் செம்மல் விருது
2012-ல் பச்சமுத்து பைந்தமிழ் விருது-வாழ்நாள் சாதனையாளர் விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்.
பாரதிதாசன் பல்கலைக் கழகம் இவருக்கு முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியது.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தமிழுக்கும் தமிழினத்திற்கும் சேவையாக செய்ததால் ஐயா இளங்குமரனாரின் நினைவு நாளில் அவரது சேவைகளையும் அற்பணிப்புகளையும் நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம்

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *