Headlines

அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது!

04.08.2023 , சென்னை

அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!.

(அமெரிக்காவும் இந்தியாவும்தான் நிலத்தடிநீரை அதிகம் உறுஞ்சுகிறதாம்!)

மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்ப தால் பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் 1993 மற்றும் 2010 ஆண்டு களுக்கு இடையில் பூமியானது கிட்டத்தட்ட 80 சென்டிமென்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ் ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பூமியின் கால நிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர்,

ஜியோ பிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப் பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் 2.150 ஜிகா டன் நிலத்தடிநீர் மனிதர்களால் உறிஞ்சப்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் குறைதல் மற்றும் கடல்மட்ட உயர்வு காரணமாக பூமியின் துருவமானது ஆண்டுக்கு நீ 4.36 சென்டிமீட்டர் வேகத்தில் 64.16 டிகிரி கிழக்கு நோக்கி நகர்ந்தது

இந்த காலகட்டத்தில் மனிதர்கள் எடுத்த நீரின் அளவு 0.24 அங்குலம் அல்லது 25.4 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடல்மட்ட உயர்வுக்கு சமம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் தற்போதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடிநீரின் குறிப்பிட்ட பங்களிப்பு ஆராயப்படவில்லை.

1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியாவில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப் பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும். இதன்மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமையான தரவுகள் இல்லை. எனவும் ஆராச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவதை தடுக்க பல்வேறு நாடுகள் பல திட்டங்களைத் தீட்டுவதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரி வித்தனர்.

பூமியின் சுழற்சி துருவம் மாறிவருவதால் விரைவில் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களை உலக நாடுகள் சந்திக்க வேண்டிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *