26.07.2023
சிங்கள இனவெறி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட தழிழர்களுக்கு நீதிவேண்டி கனடா அரசாங்கம் நேரடியாக உதவிடக்கோரி ஒட்டாவா பாராளுமன்றம் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலமக்கள் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டமையானது குறிப்பிடத்தக்கது. இதன்போது ஏனைய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர். புதைகுழிதொடர்பான பதாதைகள் அட்டைகளையும் ஏந்தி கொண்டு நின்றமையும் குறிப்பிடத்தக்கது. அவை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் இருந்தமையால் வேற்று இனமக்கள் புரிந்து கொண்டு தாங்களும் உதவுவதாக க் கூறினர். கொட்டும் மழையின் மத்தியிலும் கலந்து தங்கள் வரலாற்றுக்கடமையை நிறைவேற்றியமைக்கு,தாயகத்தில் இதனை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் தங்களுடன் கரம்கோர்த்து மேலும் நீதிகிடைக்கும்வரை போராடவேண்டும் என்ற எண்ணம்,நெருப்பாக மாறும் என்ற நம்பிக்கையோடு வாழ்வதாகவும் கூறினர். தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி மற்றும் குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு விகாரை சார்ந்து சர்வதேசத்திடம் நீதிகோரி வரும் 28/07/2023 அன்று பூரண கதவடைப்புக்கும், போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்