Headlines

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார்.

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் அடியில் தலைவைத்து படுத்து பதட்டத்தை ஏற்படுத்தி மரு.அன்புமணி இராமதாசு அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என் எல் சி நிறுவனம் நேற்று (27-07-23)வளையமாதேவியில் முப்பது நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெல் வயலில் காவல்துறையின் பாதுகாப்போடு பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை இறக்கி வயலை நாசம் செய்து வாய்க்கால் வெட்டியது என்எல்சி

இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் தமிழக காவல்துறை பாதுகாப்புடன் இந்த பணிகள் நடந்து வந்தது. இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கட்சியின் தலைவர் மரு.அன்புமணி இராமதாசு பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து என்எல்சி வெளியேற வேண்டும் என அவர் கடும்கோபத்தில் பேசினார்.

மேலும் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இந்த வேளையில் காவலர்கள் மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இரும்பு தடுப்பு வேலிகள் தள்ளப்பட்டன. காவல் வாகனம் மீது கல்வீசப்பட்டதாகக் கூறி பாமக வினரை தாக்கியது காவல்துறை

மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடியடி நடத்தினர். வஜ்ரா வாகனத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. அதோடு மரு.அன்புமணிி இராமதாசை அதிரடியாக கைது செய்த காவலர்கள் வாகனத்தில் ஏற்றினர். இதனால் சினம் கொண்ட கட்சியினர் காவல் துறை வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். மேலும் மரு.அன்புமணி இராமதாசை அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்தனர்.

இந்த வேளையில் சிலர் காவல்துறை வாகனத்தின் முன்புறம் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறை வாகனம் அங்கிருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து காவல்துறை வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.காவல்துறை வாகனத்தின் முன்னும், பின்னும் பாமக கட்சியை சேர்ந்தவர்கள் மரு.அன்புமணி இராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *