Headlines

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

08.08.2023, சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றிரவு எட்டு மணிக்கு சிறையிலிருந்து விசாரணைக்காக அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டார் அவரை சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 2-வது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சரிடம் 200 கேள்விகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்கவுள்ளதாகத் தெரிகிறது.

அமைச்சரிடம் நடந்த விசாரணையின் போது அவரது வழக்கறிஞருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவருக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று ஆகஸ் 07 உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்பூர்வமானது என்பதால், இந்த கைது நடவடிக்கை செல்லும் எனத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் நேற்று மாலையே மனுதாக்கல் செய்தார்.

நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை தாங்கள் கவனித்துக் கொள்வதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து சிறைத் துறை அதிகாரிகளுடனான நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இரவு 8 மணியளவில், பலத்த பாதுகாப்புடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து வரப்பட்டு
விசாரணை நடத்தப்பட்டது.

அதேவேளையில் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது இதனை ஒட்டி சென்னை சாஸ்திரி பவனில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *