Headlines

மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..!

02.08.2023 , சென்னை

மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..!

உலகெங்கும் தமிழர்களின் பரவி வாழ்ந்தாலும் அவர்களின் ஆபத்தான நேரங்களில் நெருக்கடியான காலகட்டங்களில் தொப்புள் கொடி உறவான தாய் தமிழகம் அவர்களுக்கு உதவிடும் வகையில், முதன்மை பங்கைப் பெரிதாக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அயலகத் தமிழர்களிடையே பல காலமாக உண்டு.

இதையே உள்நாட்டில் கேரளா கர்நாடகா, மராட்டியம், மற்றும் அந்தமான் தீவுகளில் , தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.

மலேசியாவிலும் இவ்வாறு தமிழன் பாதிக்கப்படும் போது தாய் தமிழகம் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை.

இதன் ,அதிகபட்ச எதிர் விளைவு தமிழர்களுக்கு இரண்டாவது தாய் நிலமாக விளங்கிய ஈழத்தை 2009 இல்
நாம் இழந்தோம்.

இப்போது –
மணிப்பூர் -மியான்மர் எல்லையில் இந்திய நிலப்பகுதியில் வாழும் தமிழர்கள் இன்னல் படுவதையும் இனக் கலவரங்களால் உயிரச்சத்தோடு வாழ்வதையும் நாம் ஊடகங்களில் பார்க்கிறோம் .

இந்த “மோரே” தமிழர்கள் இரண்டாம் உலகப்போரின்போது மியான்மரிலிருந்து ( அப்போது பர்மா) தமிழகம் திரும்பி வரும் வழியில் இந்த இடத்தில் தங்கி கடந்த 80 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்கள்.

இப்போது மணிப்பூரின் இரு பழங்குடி இனத்தவர் இடையே நடக்கும் மோதல்களில் இவர்களது வீடுகளும் கடைகளும் சூறையாடப்படுவதாக செய்திகள் வருகின்றன .எந்த நேரத்தில் என்ன நேருமோ என்ற உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக “மோரே” தமிழர்கள் கூறுகின்றனர்.

ஆனால்-
தமிழக அரசு எந்த எதிர்வினையும் ஆற்றியதாக தெரியவில்லை.

தமிழகத்தில் புலம் பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெறும் வதந்தி பரவிய நிலையிலேயே தனது மாநில தொழிலாளர்கள் மீது பீகார் அரசு காட்டிய அக்கறையையும் தமிழக அரசுடன் சேர்ந்து அது தீவிரமாக செயலாற்றியதையும் இந்த நேரத்தில் நாம் நினைவு கூற வேண்டும்.

தனது சொந்த மக்கள் மீது பீகார் அரசு காட்டிய அக்கறையில் தமிழக அரசு நூற்றில் ஒரு பங்கையாவது காட்ட வேண்டாமா..?

உடனடியாக தமிழக அரசு சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் , அதிகாரிகள் அடங்க இய ஒரு உயர்மட்ட குழுவை மணிப்பூருக்கு அனுப்பி ,

அங்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து மணிப்பூர் அரசுடனும் மத்திய அரசிடம் பேசி தீர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
” ஊடகச் செம்மல் “பவா சமத்துவன்

நிறுவனர் – தலைவர்,
இந்திய சமூக நீதி ஊடக மையம் (பதிவு),
சேப்பாக்கம்,
சென்னை – 600005

90 940 155 00 / 94440 15 755

எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்

https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *